TNPSC Tamil Current Affairs 05th January 2018

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

உலக செய்திகள்

  1. கல்வி பயில வசிகரமான நாடுகள் பற்றிய கருத்துக்கணிப்பில் கனடா மற்றும் பிரான்ஸ் 1, 2வது இடத்தில் உள்ளது. ஜெர்மனி, அமெரிக்கா, பிரத்தானியா 3,4,5 வது இடத்தில் உள்ளது
  2. அமெரிக்காவை ‘பாம்’ என்கிற பனிப்புயல் தாக்கியது
  3. இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் கடலோரப் பகுதியில் ‘எலினோர் புயல்’ தாக்கியது
  4. வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரத்தின் போது தங்களது தனிப்பட்ட சொந்த செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
  5. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உதவியை அமெரிக்க அரசு நிறுத்தி உள்ளது
  6. உலகலேயே கச்சா எண்ணெயை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு என்ற பெயரை அமெரிக்கா பெற உள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனம்(ரைஸ்டாட்) தெரிவித்துள்ளது
  7. இந்தியா – இலங்கை இடையேயான நட்புறவை மேம்படுத்தும் விதமாக, இந்தியா சார்பில் 209 அவசர ஊர்திகள் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது
  8. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹு , பிரதமர் நரேந்திர மோடிக்கு(இந்தியா) கடல் நீரைக் குடிநீராக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட ஜீப்பை பரிசளிக்க உள்ளார்

தேசிய செய்திகள்

  1. உச்ச நீதிமன்றம், உயர்நீதி மன்ற நீதிபதிகளுக்கான சம்பள உயர்வு குறித்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
  2. நாட்டில் தினமும் காலையில் தேசிய கீதம் ஒலிக்கும் கிராமங்கள் – பஹாக்பூர்(அரியானா), ஜமிகுண்டா(தெலுங்கானா)
  3. உத்தர பிரதேச மாநிலக் கல்வித்துறை, அரசு பள்ளிகளின் விடுமுறை நாட்களை குறைத்து(17 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது), வேலை நாட்களை அதிகரித்துள்ளது
  4. ஆந்திர மாநிலத்தில் மீனவர்களுக்கு கைரேகை மற்றும் ஐடிகார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
  5. சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளைகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் மற்றும், அரசு வழக்கறிஞர்கள் (சிவில் மற்றும் குற்றவியல்) என 103 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
  6. தேசிய பார்வையற்றோர் சங்கம் சார்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘உலகின் மிகச் சிறிய தவளை’ என்ற நூல் பிரெய்லி வடிவில் வெளியிடப்பட்டுள்ளது
  7. சாதி மறுப்பு திருமணம் செய்தால் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
  8. நாட்டில் மாணவர்கள் தற்கொலை அதிகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம் 1, 2வது இடத்தில் உள்ளது. தமிழகம் 3வது இடத்தில் உள்ளது
  9. 2017ம் ஆண்டு விவேகானந்தர் மண்டபத்துக்கு(கன்னியாகுமரி) 21.3 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்

வர்த்தக செய்திகள்

  1. இந்தியாவில், டிசம்பர் மாதம் மட்டும் ‘1 பில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனை’ செய்யப்பட்டுள்ளது
  2. ரிசர்வ் வங்கி விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டினை சாக்லெட் பழுப்பு நிறத்தில் வெளியிடவுள்ளது
  3. சீனாவிலிருந்து கட்டுமானம் மற்றும் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருள்கள் மீது கூடுதலாக பொருள் குவிப்பு வரி (ஆன்டி டம்பிங்) விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது
  4. நடப்பு நிதி ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தின் நஷ்டம் ரூ.3,579 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர்(அசோக் கஜபதி ராஜு) தெரிவித்துள்ளார்
  5. 2017ம் ஆண்டு 132 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 1,785 கோடி ரூபாய் நிதியை எஸ்எம்இ எக்ஸ்சேஞ்ச் மூலம் திரட்டியுள்ளது
  6. தற்போது நாட்டில் 400 சதோச விற்பனை நிலையங்கள் உள்ளது என்றும் இந்த ஆண்டு இன்னும் 100 நிலையங்களை நிறுவ உள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
  7. ஆங்கில மொழியை பிரத்தேகமாக கற்று கொள்ளவும், பேசவும் முரெனபந.அந என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது

விளையாட்டு செய்திகள்

  1. ஐசிசி தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டியில் முதலிடத்திலும், ஒரு நாள் போட்டியில் 2வது இடத்திலும், டி-20 போட்டியில் 3வது இடத்திலும் உள்ளது
  2. ஐசிசியின் டுவென்டி 20 பேட்ஸ்மென்களுக்கான தரவரிசையில் கோலின் முன்னரா(சியூசிலாந்து) முதலிடத்தில் உள்ளார். பவுலர்களுக்கான தரவரிசையில் இஷ் சோதி(நியூசிலாந்து) முதலிடத்தில் உள்ளார்
  3. ஆசிய அணிகள் வெற்றி பெறாத மைதானம் – கேப்டவுன் மைதானம்(தென் ஆப்பிரிக்கா)
  4. ரஞ்சி கோப்பை உள்பட தேசிய போட்டிகளில் விளையாட பீகார் கிரிக்கெட் சங்க அணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக பீகார் கிரிக்கெட் அணி தேசிய போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
  5. நடப்பாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓப்பனில் இருந்து ஆன்டி முர்ரே(பிரிட்டன்) விலகுவதாக அறிவித்துள்ளார்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

  1. கண் பார்வை இழப்பை முற்றிலுமாக தடுக்கக் கூடிய ‘லக்ஸ்டுர்னா மருந்தை’ அமெரிக்க விஞ்ஞானிகள்(ஸ்பார்க் தெரப்பியடிக்ஸ் நிறுவனம்) கண்டுபிடித்துள்ளனர்

விருதுகள்

  1. அந்திப்பூர்(ஈரோடு) கிராமத்தை சேர்ந்த மாணவன் சிண்ணக் கண்ணனுக்கு மத்திய அரசு விருதான இளம் விஞ்ஞானி விருது(அரசு பேருந்து வசதி இல்லாததால், கிராம மக்கள் ஒரு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வரை போக்குவரத்திற்கு செலவு செய்வதை கட்டுரையாக சமர்ப்பித்ததற்கு) வழங்கப்பட்டுள்ளது.

புதிய நியமனம்

  1. தமிழக சட்டசபை அவை முன்னவராக ஓ. பன்னீர் செல்வம்(துணை முதல்வர்) நியமிக்கப்பட்டுள்ளார்

முக்கிய தினங்கள்

  1. டிசம்பர் 05 – உலக டீசல் எந்திர தினம்